1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Sensex Plunges 1650 Points as Iran Conflict and Soaring Oil Prices Spook Dalal Street

ஹார்முஸ் ஜலசந்தி முடங்கும் அபாயம்.. ரணகளமான பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 1650 புள்ளிகள் சரிவு..!

share market
மத்திய கிழக்கில் ஈரான்-அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்து, ஹார்முஸ் ஜலசந்தி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், இந்திய பங்குச்சந்தை இன்று கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. 
 
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1650 புள்ளிகளும், நிஃப்டி 532 புள்ளிகளும் சரிந்தன. கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 110 டாலரை தாண்டியதால், இறக்குமதியை நம்பியிருக்கும் இந்திய பொருளாதாரத்தில் பணவீக்கம் அதிகரிக்கும் என்ற அச்சம் முதலீட்டாளர்களிடையே எழுந்துள்ளது.
 
இந்த உலகளாவிய பதற்றத்தால் இந்திய ரூபாயின் மதிப்பும் முன்னெப்போதும் இல்லாத வகையில் சரிந்தது. மெட்டல், பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஆட்டோமொபைல் துறை பங்குகள் 4 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தன. குறிப்பாக டாடா ஸ்டீல், அதானி போர்ட்ஸ் மற்றும் டைட்டன் நிறுவனப் பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன.
 
எனினும், டிசிஎஸ், ஹெச்சிஎல் போன்ற ஐடி நிறுவனப் பங்குகள் ஓரளவு தாக்குப்பிடித்தன. போர் நிறுத்தம் குறித்த தெளிவான முடிவு வரும் வரை சந்தையில் இந்தத் தடுமாற்றம் நீடிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
ஈரானுக்கு உதவும் இந்திய மக்கள்.. கணவர் கட்டிய தாலியை தானமாக கொடுத்த பெண்..!