வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By
Last Modified: திங்கள், 22 ஏப்ரல் 2019 (11:34 IST)

வீழுமா ஜியோ? ஆஃபர் வழங்கி ஆள் சேர்க்கும் பிஎஸ்என்எல்!!

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய கேஷ்பேக் சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. இந்த சலுகையில் வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் ரூ.4,575 வரை கேஷ்பேக் பெற முடியும். 
 
இந்த கேஷ்பேக் சலுகை குறித்த முழு விவரம் பின்வருமாறு... 
வருடாந்திர கேஷ்பேக்: 
1. ரூ.1,525 மாதாந்திர சலுகைக்கான ஆண்டு சந்தா தொகை ரூ.18,300 முழுமையாக செலுத்தும் போது ரூ.4,575 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 
2. ரூ.1,125 மாதாந்திர சலுகைக்கான ஆண்டு சந்தா தொகையை முழுமையாக செலுத்தும் போது ரூ.3,375 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 
3. விலை குறைந்த ரூ.725 மற்றும் ரூ.525 மாதாந்திர சலுகைகளில் 20% கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 
4. ரூ.399, ரூ.325 மற்றும் ரூ.225 போஸ்ட்பெயிட் ரீசார்ஜ் மீது 10% கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 
6 மாதங்களுக்கான கேஷ்பேக்: 
5. ரூ.1,525 மாதாந்திர சலுகைக்கு ஆறு மாதங்களுக்கான தொகையை முழுமையாக செலுத்தும் போது 12% கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 
6. ரூ.1,125 மற்றும் ரூ.799 போஸ்ட்பெயிட் சலுகைகளுக்கு 12% வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 
7. ரூ.725 மற்றும் ரூ.525 சலுகைகளை தேர்வு செய்வோருக்கு 8% கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 
8. ரூ.399, ரூ.325 மற்றும் ரூ.225 போஸ்ட்பெயிட் சலுகைகளுக்கு 4% கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
இந்த கேஷ்பேக் சலுகை கேரளா வாடிக்கையார்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 2019 மாதத்தில் ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்கள் மட்டுமே புதிதாக வாடிக்கையாளர்களை சேர்த்திருப்பதாக டிராய் தெரிவித்துள்ள நிலையில், வாடிக்கையாளர்களை அதிகரிக்க பிஎஸ்என்எல் நிறுவனத்தின் புது யுக்தியாகவே இது பார்க்கப்படுகிறது.