ஒரேடியா போட்டு தாக்காதீங்க டா... அம்பானியை கடுப்பாக்கும் பிஎஸ்என்எல்!!!

Last Updated: வியாழன், 21 பிப்ரவரி 2019 (14:23 IST)
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு பல சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன. இந்த சலுகைகள் அனைத்தும் ஜியோவின் அறிமுகத்திற்கு பின்னரே துவங்கியது. காரணம் ஜியோ அப்படிபட்ட பல சலுகைகளை வழங்கியது.  
 
ஜியோ டெலிகாம் துறையில் வந்த பிறகு மற்ற நிறுவனங்கள் ஆடி போய்தான் இருக்கிறார்கள். பிஎஸ்என்எல் ஜியோவுக்கு நேரடி போட்டியாக பல சலுகைகளை அடுத்தடுத்து வழங்கி வருகிறது. 
 
அந்த வகையில் தற்போது புது சலுகைகளை பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. சலுகைகளின் பட்டியல் பின்வருமாறு, 
 
ரூ.399 ரீசார்ஜ் திட்டம்:
ரூ.399 திட்டத்தில் 3.21 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் (டெல்லி மற்றும் மும்பை), தினமும் 100 எஸ்எம்எஸ், ரிங் டோன் பேக் வழங்கப்படுகிறது. 
ரூ.349 ரீசார்ஜ் திட்டம்: 
ரூ.349 திட்டத்தில் 3.2 ஜிபி டேட்டா, 64 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் இலவச வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. 
 
ரூ.298 ரீசார்ஜ் திட்டம்:
ரூ.298 திட்டத்தில் 1 ஜிபி டேட்டா 54 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் இலவச வாய்ஸ் கால், எஸ்எம்எஸ், ரோமிங் போன்ற  சலுகைகளும் வழங்கப்படுகிறது.
 
ரூ.155 ரீசார்ஜ் திட்டம்:
ரூ.155 ரீசார்ஜ் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா என 17 நாட்களுக்கு 34 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
 
ரூ.98 ரீசார்ஜ் திட்டம்:
ரூ.98 திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா, 24 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :