செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. மக்களவை தேர்தல் முடிவுகள் 2019
Written By
Last Updated : ஞாயிறு, 26 மே 2019 (14:08 IST)

தேனி தொகுதியில் முறைகேடு: தேர்தல் முடிவை எதிர்த்து வழக்கு!

தேனி தொகுதியில் முறைகேடு நடந்துள்ளது எனவும், தேர்தல் முடிவை எதிர்த்து வழக்கு தொடர் உள்ளதாகவும் ஈவிகேஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். 
 
திமுக காங்கிரஸ் கூட்டணி போட்டியிட்ட இடங்களில் தேனி தொகுதி தவிர அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. தேனித் தொகுதியில் மட்டும் அதிமுக வேட்பாளரும் ஓபிஎஸ்-ன் மகனுமான ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். 
 
காங்கிரஸ் சார்பில் அந்த தொகுதியில் போட்டியிட்ட ஈவிகேஸ் இளங்கோவன் 65717 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்நிலையில், சென்னையில் உள்ள காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் ஈவிகேஸ் இளங்கோவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். 
 
அவர் பேசியதாவது, தேனி தொகுதியில் முறைகேடு நடந்துள்ளது. அங்கு பல்வேறு தில்லுமுல்லுகள் அரங்கேறியுள்ளன. பல மின்னணு வாக்குப்பதிவு இயந்திரன்களில் சீல் இல்லை. தேனி தொகுதியில் ஒப்புகைச் சீட்டுகளை முழுமையாக எண்ண வேண்டும் என்று வழக்குத் தொடர உள்ளேன். 
 
இது தொடர்பாக வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நான் பண பலம், அதிகார பலம் காரணமாக தோற்கடிக்கப்பட்டேன் என தெரிவித்துள்ளார்.