திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. மக்களவை தேர்தல் முடிவுகள் 2019
Written By
Last Updated : வியாழன், 23 மே 2019 (07:53 IST)

5 - 6 மணி நேரம் தாமதமாகும் தேர்தல் முடிவுகள்: காரணம் என்ன?

வழக்கத்தைவிட 5 - 6 மணி நேரம் தாமதமாகவே தேர்தல் முடிவுகள் வெளியாகும் என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. 67.11% வாக்குகள் பதிவாகியுள்ளன. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. 
 
முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்படும் நிலையில், இன்னும் சற்றும் நேரத்தில் வாக்கு எண்ணிக்கை துவங்கவுள்ளது. மின்னணு இயந்திரங்களின் வாக்குகள் முழுவது எண்ணப்பட்ட பிறகு இப்புகைசீட்டு இயந்திரமான விவிபேட் பதிவுச் சீட்டுகள் எண்ணப்படும். 
 
ஒரு தொகுதிக்கு 5 விவிப்பேட் இயந்திரங்கள் எண்ணிக்கைக்கு எடுத்துக்கொள்ளப்படும். வழக்கமாக வாக்கு எண்ணிக்கை நாளில் மாலைக்குள் தேர்தல் முடிவுகள் வெளியாகும். ஆனால், இந்த முறை 5 - 6 மணி நேரம் தாமதமாகவே தேர்தல் முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.