1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 22 மே 2019 (13:18 IST)

தினகரனின் மெகா திட்டம்? ஓகே ஆகிவிட்டால் அவர்தான் முதல்வர்!

நாளை வெளிவரவுள்ள மக்களவை தேர்தல் முடிவை விட தமிழக மக்கள் 22 சட்டமன்ற தொகுதிகளின் முடிவுகளைத்தான் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஏனெனில் அதிமுக ஆட்சி நீடிக்குமா? முடியுமா? என்பது நாளை தெரிந்துவிடும்
 
நாளைய முடிவில் அதிமுக ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்றுவிட்டால் அந்த ஆட்சியை 2021ஆம் ஆண்டு வரை யாராலும் கவிழ்க்க முடியாது. ஆனால் அதே நேரத்தில் ஐந்துக்கும் குறைவான தொகுதிகளில் மட்டும் அதிமுக வெற்றி பெற்று, அமமுக சுமார் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றால் சிக்கல்தான்  என்று கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலைமை வந்தால் அதிமுக ஆட்சியை திமுக துணையுடன் தினகரன் கவிழ்ப்பார் என்று கூறப்பட்டு வந்தாலும் அதிமுக ஆட்சியை அவர் கவிழ்க்க மாட்டார் என்றும் அவ்வாறு கவிழ்த்தால் திமுகவுக்குத்தான் லாபம் என்றும், அதனால் தினகரனுக்கு எந்தவித லாபமும் இல்லை என்றும் கூறப்படுகிறது
 
எனவே அதிமுகவுக்கு மெஜாரிட்டி கிடைக்காமல் போனால், ஈபிஎஸ், ஓபிஎஸ் பதவி விலகி வேறொருவரை முதல்வராக்கினால் அதிமுக ஆட்சி தொடர ஆதரவு வழங்க தினகரன் நிபந்தனை விதிப்பார் என்றும், இந்த நிபந்தனையை ஏற்பதை தவிர அதிமுகவுக்கு வேறு வழியில்லாததால் ஏற்றுக்கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிபந்தனையை அதிமுக தரப்பு ஏற்றுக்கொண்டால் தானே முதல்வராகி அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்பதுதான் தினகரனின் மெகா திட்டம் என்றும், எந்த நிலையிலும் அவர் திமுகவுடன் கைகோர்க்க மாட்டார் என்றும் அமமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதெல்லாம் எந்த அளவுக்கு சாத்தியம் என்பது இன்னும் 24 மணி நேரத்தில் தெரிந்துவிடும்