தமிழகத்தில் தாமரை மலரவே மலராது போல....

Last Modified வியாழன், 23 மே 2019 (10:45 IST)
2019 மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், 37 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. 
 
வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் மீதமுள்ள 39 தொகுதிகளில் திமுக கூட்டணி 37 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. கூட்டணி 2 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. 
 
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என கொக்கறித்த பாஜகவினர் கடும் பின்னடைவை சந்தித்துள்ளனர். பாஜகாவின் நட்சத்திர வேட்பாளர்களாக பார்க்கப்பட்ட தமிழிசை, எச்.ராஜா, பொன்.ராதா கிருஷ்ணன் ஆகியோர் பெரிய வாக்குவித்தியாசத்தில் பிந்தங்கியுள்ளனர். 
 
கன்னியாகுமாரியில் வேட்பாளர் பொ.ராதாகிருஷ்ணனை விட சுமார் 23,000 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார் திமுக கூட்டணி வேட்பாளர் ஹெச்.வசந்த்குமார். 
 
தூத்துக்குடியில் பாஜக வேட்பாளர் தமிழிசையை விட சுமார் 25,000 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார் திமுக வேட்பாளர் கனிமொழி. 
 
அதேபோல், சிவகங்கையில் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் கார்திக் சிதம்பரத்தை விட பல வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் எச்.ராஜா பிந்தங்கியுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :