வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. மக்களவை தேர்தல் முடிவுகள் 2019
Written By
Last Modified: வியாழன், 23 மே 2019 (10:12 IST)

நோட்டாவை விடக் கம்மியான வாக்குகள் – அதிர்ச்சியில் தினகரன் !

ஓசூர் தொகுதியில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர் புகழேந்தி நோட்டாவை விடக் கம்மியான வாக்குகளைப் பெற்றுள்ளார்.

17 ஆவது மக்களவைத் தேர்தல் கடந்த் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை நடைபெற்று முடிந்துள்ளது. இதனை அடுத்து  வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியுள்ளது. பதட்டமான வாக்கு மையங்களில் போலிஸ் மற்றும் துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அளவில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வரும் வேளையில் தமிழகத்தில் நிலைமை தலைகீழாக உள்ளது. திமுக கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலைப் பெற்று வருகின்றனர். திமுகவின் ஸ்டார் வேட்பாளர்களான கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர்.

அதிர்ச்சியளிக்கும் விதமாக அமமுக வேட்பாளர்கள் யாரும் குறிப்பிடத்தகுந்த வாக்குகள் பெறாமல் பின்னடைவில் உள்ளனர். சில தொகுதிகளில் நோட்டாவை விடக் கம்மியான வாக்குகள் பெற்று அதிர்ச்சியளித்துள்ளனர். ஒசூர் தொகுதியொல் போட்டியிட்ட அமமுக வேட்பாளர் புகழேந்தி நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்றுள்ளார். ஓசூரில் நோட்ட 122 வாக்குகளும்  புகழேந்தி 18 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.