வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. மக்களவை தேர்தல் முடிவுகள் 2019
Written By
Last Modified: வியாழன், 23 மே 2019 (09:54 IST)

சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் முன்னிலை – மக்களவைத் தேர்தல் முடிவுகள் !

சிதம்பரம் தொகுதியின் திமுக கூட்டணி வேட்பாளர் திருமாவளவன் முன்னிலையில் உள்ளார்.

இந்தியாவின் 17 ஆவது மக்களவைத் தேர்தல் கடந்த் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை நடைபெற்று முடிந்துள்ளது. இதனை அடுத்து  வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியுள்ளது. பதட்டமான வாக்கு மையங்களில் போலிஸ் மற்றும் துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலைப் பெற்று வருகின்றனர். சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தொடக்கத்தில் பின்னிலையில் இருந்தாலும் இப்போது முன்னேறி அதிமுக வேட்பாளரை விட 200 வாக்குகள் அதிகமாகப் பெற்று முன்னிலையில் உள்ளார்.

தற்போதைய நிலவரப்படி திருமாவளவன் 20867 வாக்குகளும் அதிமுகவின் பொ சந்திரசேகர் 20686 வாக்குகளும் பெற்றுள்ளனர்.