ஆபரேஷன் சக்சஸ், பேஷண்ட் டெட்: கானல் நீராகும் ஸ்டாலின் கனவு!

Last Modified வியாழன், 23 மே 2019 (09:57 IST)
கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் நாடு முழுவதும் மோடி அலை வீசிய போதிலும் தமிழகத்தில் மட்டுமே லேடி அலை வீசியதால் 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இருப்பினும் மத்திய அமைச்சரவையில் அதிமுகவால் இடம்பெற முடியவில்லை
அதேபோல் இந்த முறையும் நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று வரும் நிலையில் தமிழகத்தில் பாஜகவின் எதிர்க்கூட்டணியான அதிக தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. எனவே கடந்த தேர்தல் போலவே இந்த தேர்தலிலும் ஆபரேஷன் சக்சஸ், பேஷண்ட் டெட் என்ற வகையில் தமிழகத்திற்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பே இல்லை என்பது போல் தெரிகிறது
மேலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று ஸ்டாலின் கூறி வந்த நிலையில் ஆட்சியை காப்பாற்றும் வகையில் அதிமுக 8 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருவதால் ஸ்டாலினின் முதல்வர் கனவு கானல் நீராகவே உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :