வெற்றியை கொண்டாட இப்பவே தயாராகிவிட்ட அண்ணா அறிவாலயம்!

Last Updated: வியாழன், 23 மே 2019 (08:06 IST)
நாடு முழுவதும் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்னும் சில நிமிடங்களில் எண்ணப்படும் நிலையில் தமிழகத்தை பொருத்தவரையில் திமுக கூட்டணியே அதிக இடங்களை கைப்பற்றும் என அனைத்து கருத்துக்கணிப்புகளும் கூறி வருகின்றன. அந்த வகையில் திமுக தொண்டர்கள் வெற்றியை கொண்டாட இப்போதே உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர்.
இன்று காலை 6 மணி முதலே திமுக தொண்டர்கள் அண்ணா அறிவாலயத்தில் குவிய தொடங்கிவிட்டனர். அதேபோல் ஸ்டாலின் வீட்டின் முன்பும், கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டின் முன்பும் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் திமுக தொண்டர்கள் வெற்றியை கொண்டாட இனிப்புகளுடன் தயாராக உள்ளனர். முதல் முன்னணி நிலவரம் அறிவிக்கப்பட்டவுடன் வெற்றி கொண்டாட்டம் தொடங்கும் என தெரிகிறதுஇதில் மேலும் படிக்கவும் :