மண்டல அலுவலர்களுக்கு வாக்குச்சாவடி மையத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய பணிகள் குறித்த பயிற்சி வகுப்பு

karur
c.anandakumar| Last Updated: செவ்வாய், 26 மார்ச் 2019 (21:12 IST)
நடைபெறவுள்ள மக்களவை பொதுத்தேர்தலில் வாக்குச்சாவடி மையங்களில் மேற்வேண்டிய பணிகள் குறித்து அலுவலர்களுக்கான பயிற்சிக்கூட்டம் கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்டாட்சியரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான சரவணமூர்த்தி  தலைமையில்  நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தும் முறை., வாக்காளர்  பதிவு இயந்திரங்களை  கையாளும்  முறை., மாதிரி வாக்குப்பதிவு நடத்தும் விதம் குறித்தும் அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் விரிவாகவும்.,  விளக்கமாகவும் எடுத்துரைத்தார். 
 
மேலும், நடைபெறவுள்ள மக்களவைப்பொதுத்தேர்தலில் ஈடுபடவுள்ள அனைத்து அலுவலர்களும் முழு அற்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும். கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகள் மொத்தம் 22 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு பயிற்சி பெறும் மண்டல அலுவலர்கள் உங்கள் பகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்றக்கூடிய அலுவலர்களுக்கு இந்தப்பயிற்சியை வழங்க உள்ளீர்கள்.
 
எனவே., இங்கு சொல்லப்படுகின்ற அனைத்து தகவல்களையும் நீங்கள் முழுமையாக புரிந்துகொள்ள வேண்டும். கூறப்படும் தகவல்களில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் தயங்காமல் அதைக்கேட்டு  தெளிவுபெறவேண்டும் என்றும் எடுத்துரைக்கப்பட்டது. 
 
மேலும். வாக்குப்பதிவு நாள் அன்று முதலில் வாக்குச்சாவடி மையத்தில் உள்ள முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்திக்காட்டப்பட வேண்டும். இந்த மக்களவை பொதுத்தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முதன் முறையாக ஏஏPயுவு எனப்படும்ää வாக்காளர் யாருக்கு வாக்களித்தார் என்பதை அவருக்கு மட்டும் காட்டும் இயந்திரம் பயன்படுத்தப்படவுள்ளது. 
 
எனவே.,  இந்தக்கருவியினை கையாளும் முறை குறித்தும் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்படும் பணியில் மிகுந்த கவனத்துடனும்  அக்கறையுடனும் செயல்படவேண்டும் என்றும் எடுத்துரைக்கபட்டது.
 
 


இதில் மேலும் படிக்கவும் :