பழக்க தோஷத்தில் உளறிய ராமதாஸ்: இப்படியா பேசுவது... அதிமுகவினர் அதிருப்தி!!!

ramadoss
Last Modified வியாழன், 28 மார்ச் 2019 (13:31 IST)
தேர்தல் பரப்புரையின் போது பாமக நிறுவனர் அதிமுகவிற்கு மக்கள் ஓட்டு போடக்கூடாது என வாய் தவறி பேசியது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
 
101 சதவீதம் அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம், இனி திராவிடக் கட்சிகளோடு கூட்டணியே இல்லை என்று வீரவசனம் பேசி, மக்களை முட்டாளாக்கிய பாமக தற்பொழுது தனது கோட்பாடுகளை மீறி மக்களவைத் தேர்தலுக்காக 7 சீட்டுகளை பெற்றுக் கொண்டு அதிமுக மற்றும் பாஜகவோடுக் கூட்டணி அமைத்துள்ளது. 
 
தேர்தல் நெருங்குவதால் அனைத்து கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
 
அந்த வகையில் ஆரணியில் அதிமுக வேட்பாளார் ஏழுமலையை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் மக்களிடையே பேசிக்கொண்டிருந்தார். இந்நிகழ்ச்சியில் அதிமுக அமைச்சர் ராமசந்திரன், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பங்குபெற்றனர்.
 
அப்போது மக்களிடையே பேசிய ராமதாஸ் பழக்கதோஷத்தில் எந்தக் காரணத்திற்கும் திமுக, அதிமுகவிற்கு ஓட்டு போடாதீர்கள் என கூறிவிட்டார். பின்னர் சுதாரித்த அவர் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு ஓட்டு போடாதீர்கள் என கூறினார். இது அதிமுக நிர்வாகிகளிடையே பெரும் அதிருப்தியையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது.


இதில் மேலும் படிக்கவும் :