வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. வேட்பாளர்கள் பேட்டிகள்
Written By
Last Updated : வியாழன், 28 மார்ச் 2019 (09:27 IST)

டபுள் கேம் ஆடுகிறதா பாமக? பொதுமேடையில் உண்மையை உடைத்த திருமாவளவன்!!!

முதிலில் திமுகவை ஒழித்துவிட்டு பின்னர் அதிமுகவை ஒழிக்கலாம் என ராமதாஸ் தன்னிடம் கூறியதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
 
101 சதவீதம் அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம், இனி திராவிடக் கட்சிகளோடு கூட்டணியே இல்லை என்று வீரவசனம் பேசி, மக்களை முட்டாளாக்கிய பாமக தற்பொழுது தனது கோட்பாடுகளை மீறி மக்களவைத் தேர்தலுக்காக 7 சீட்டுகளை பெற்றுக் கொண்டு அதிமுக மற்றும் பாஜகவோடுக் கூட்டணி அமைத்துள்ளது. 
 
பாமக நிறுவனர் ராமதாஸ் சிதம்பரத்தில் சிதம்பரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகையில் திருமாவளவனை ஒரு அரசியல் தலைவராக்கியதே நான் தான் என கூறினார்.
 
இந்நிலையில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக்கூட்டத்தில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், 2009ல் தைலாபுர தோட்டத்திற்கு என்னை அழைத்த ராமதாஸ், திமுக கூட்டணியில் இருந்து தன்னை விலகுமாறு கூறினார். முதலில் திமுகவை ஒழித்துவிட்டு பின்னர் அந்த அம்மா ஆட்சியை (அதிமுக) ஒழித்துவிடலாம் என கூறினார். நான் கூறுவது பொய் அல்ல சத்தியம் என திருமாவளவன் கூறினார். 
 
திருமாவளவன் கூறுவது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. ஆனால் திராவிடக் கட்சிகளோடு கூட்டணியே இல்லை, அப்படி கூட்டணி வைத்தால் தாயுடன் படுக்கையை பகிர்வது போல என கூறிய பாமக தற்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் திருமாவளவன் கூறுவது உண்மையாக இருக்கலாம் எனவே நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இதற்கு பாமக தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.