வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 27 மார்ச் 2019 (10:12 IST)

எருமமாடுன்னு கிண்டலடித்த ரசிகர்: செருப்படி கொடுத்த ரஜினி பட நடிகை!!!

தன்னை எருமைமாடுன்னு கிண்டலடித்த ரசிகருக்கு சோனாக்ஷி தக்க பதிலடி கொடுத்துள்ளார். 
 
சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் நடிகர், நடிகைகளை திட்டுவது வழக்கமான ஒன்று. இதனாலேயே பல நடிகர், நடிகைகள் ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் பக்கமே வருவதில்லை. ஆனால் சில நடிகர், நடிகைகள் பேஸ்புக், டிவிட்டரில் எப்பொழுது ஆக்டிவாக இருப்பர். அவ்வப்போது தங்களின் புகைப்படத்தை பதிவிடுவர்.
 
இதற்கு ரசிகர்கள் பதிவிடும் கமெண்ட்டுகளுக்கும் அவர்கள் ரிப்ளை செய்வர். அப்படி நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெற்ற சோனாக்ஷி சின்ஹாவிடம், உங்களை ரசிகர் ஒருவர் எருமை மாடு என கிண்டலடித்திருக்கிறாரே, அதற்கு உங்களின் பதில் என்ன என கேட்கப்பட்டது.
 
அந்த நபர் போட்ட போஸ்ட்டை பார்த்த சோனாக்‌ஷி, அவர் buffallo என்பதற்கு பதில் buffello என எழுதியுள்ளார். முதலில் சரியாக எழுதக் கற்றுக்கொண்டு என்னை கலாயுங்கள் என கூறினார்.
 
முன்பு இருந்ததற்கு நான் எவ்வளவோ என் உடம்பை குறைத்துள்ளேன். பேசுபவர்கள் பேசிக்கொண்டே இருக்கட்டும் அதைப்பற்றின கவலை எனக்கில்லை என அவர் கூறினார். இவர் தமிழில் ரஜினியின் லிங்கா படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.