செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்
Written By
Last Modified: வியாழன், 4 ஏப்ரல் 2019 (11:22 IST)

1 லட்சத்து 76 ஆயிரம் கோடி சொத்துடைய சுயேச்சை வேட்பாளர்???

சுயேட்சை வேட்பாளர் ஒருவர் தனக்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி சொத்திருப்பதாக பிரமாணப் பத்திரத்தில் சொத்து விவரத்தை தாக்கல் செய்துள்ளார்.
நெல்லை ஜெபமணியின் மகனும் ஓய்வுபெற்ற காவல் அதிகாரியுமான மோகன்ராஜ் என்பவர் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இதற்காக அவர் வேட்புமனுவும் தாக்கல் செய்தார்.
 
இதற்கிடையே தேர்தல் ஆணையம் கண்டிப்பாக இருப்பது போல நடிப்பதாகவும் தங்களின் பணியை சரிவர செய்யாமல் இருக்கிறார்கள் என்பதை நிரூபிப்பதற்காகவும் தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தனக்கு கோபாலபுரம், போயஸ்கார்டன், கோடநாடு ஆகிய இடங்களில் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி சொத்து இருப்பதாகவும், தன் பெயரில் 4 லட்சம் கோடி கடன் இருப்பதாகவும் போலியான சொத்து ஆவணத்தை தாக்கல் செய்தார் மோகன்ராஜ்.
 
இதனை சரிபார்த்த தேர்தல் ஆணையம், இவர் கூறியிருப்பது உண்மை என நம்பி இவருக்கு தேர்தலில் போட்டியிட மிளகாய் சின்னம் ஒதுக்கியுள்ளது.
 
இதுகுறித்து பேசிய அவர், இதையே சரியாக ஆய்வு செய்யாத தேர்தல் அதிகாரிகள், பெரும் கட்சிகளுக்கு எந்த அளவுக்கு சாதகமாக நடந்துகொள்வார்கள் என மக்களுக்கு தோலுரித்துக் காட்டுவதற்காகவே இப்படி செய்ததாக கூறியுள்ளார்.