தமிழகத்தில் 7,780 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவை

electon
Last Updated: செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (19:07 IST)
அனைத்துக் கட்சிகளும் 40மக்களவை தொகுதிகள், 19 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்காக  தீவிரமான பிரசாரத்தில் ஈடுப்பட்டனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றுடன் இறுதிகட்ட பிரசாரம் முடிவடைந்தது.
தமிழகத்தில் இன்றைய இறுதிகட்ட பிரசாரம் முடிவடைகிற வரைக்கும் தொகுதிப்பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு வேட்புமனு தாக்கல், பரப்புரை செய்யவதற்கான இடத்தை தேர்வு செய்தல் ஆகிய காரணங்களால் தமிழக களம் பரப்பரப்பாக காணப்பட்டது.
 
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதற்கொண்டு அரசியல் தலைவர்கள் திட்டமிட்டு வாக்குகலை சேகரித்தனர்.
 
மே 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளிலும் 2 நாட்கள் பரப்புரை செய்யக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் தமிழகத்தில் மொத்தம் 67,720 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதில் வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.
 
நாளை மறுநாள் தமிழகம், புதுச்சேரியில் 40 மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :