பாலிவுட் படத்திற்காக உடல் எடையை குறைத்து ஒல்லியான கீர்த்தி சுரேஷ்!

Last Modified செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (12:14 IST)
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருகிறார். கமர்ஷியல் ஹிட் படங்களில் நடித்து வந்த அவருக்கு நடிகை சாவித்ரியின் பயோபிக்கான நடிகையர் திலகம் புதிய பரிணாமத்தைக் கொடுத்தது. கீர்த்தி சுரேஷின் நடிப்பை அந்தப் படம் அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்றது. இதனால், தனது அடுத்தபடத்தை மிகவும் கவனமாக அவர் தேர்வு செய்து வருகிறார். 


 
இதனிடையே கீர்த்தி சுரேஷ், தற்போது இந்தி படம் படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. இந்தப் படத்தை  மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ‘பதாய் ஹோ’ படத்தின் இயக்குனர் அமித் ஷர்மா இப்படத்தை இயக்க உள்ளதாகவும்,  இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


 
பாலிவுட் நடிகைகள் என்றாலே ஒல்லி பெல்லி இடுப்பழகை கொண்டு ஸ்லிம் பியூட்டியாக வலம் வருவார்கள். அப்படிப்பட்ட நடிகைகளுக்கு அக்கட தேசத்தில் வேற லெவல் வரவேற்பு கிடைக்கும். தற்போது இந்த சூத்திரத்தை கருத்தில் கொண்டு நடிகை கீர்த்தி சுரேஷ் உடலை குறைத்து ஒல்லியாக மாறும்  முயற்சியில் படுமும்முரமாக  ஈடுபட்டு வருகிறார். 
இதில் மேலும் படிக்கவும் :