ஆட்டோவில் பாலியல் சில்மிஷம்: பட்டப்பகலில் பெண்ணுக்கு நடந்த கொடுமை

Last Updated: சனி, 16 மார்ச் 2019 (16:11 IST)
பெண்களுக்கு எதிரானா பாலியல் வன்முறைகள் நாடு முழுவதும் அதிகரித்த வண்ணமே உள்ளது. குழந்தைகள், இளம் பெண்கள், பெண்கள், வயது முதிர்ந்தவர்கள் என வயது வரம்பின்றி பெண்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்படுவது வேதனை ஏற்படுத்துகிறது.
 
சமீபத்தில் கூட உத்திரபிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் ஆட்டோவில் வைத்து ஒரு பெண்ணுக்கு அந்த ஆட்டோ டிரைவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
லக்னோவில் கோமதி நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஒரு பெண் ஆட்டோவில் இருந்து குதித்துள்ளார். இதை கண்ட வாகன ஓட்டிகள் அந்த பெண்ணை மீட்டு விசாரித்தப்போது ஆட்டோ டிரைவர் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறியுள்ளார்.
 
இதையடுத்து ஆட்டோவை விரட்டி பிடித்து அந்த டிரைவரை அடித்து உதைத்தனர். அவனது ஆட்டோவும் அடித்து நொறுக்கினர். பின்னர் அந்த ஆட்டோ டிரைவர் போலீஸில் பிடித்து கொடுப்பட்டான். 
 
தன்னை தற்காத்துக்கொள்ள ஆட்டோவில் இருந்து குதித்ததால், அந்த பெண்ணுக்கு சில காயங்கள் ஏற்பட்டுள்ளது. எனவே, அவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 


இதில் மேலும் படிக்கவும் :