அதிமுகவுக்கு செருப்பு; பாஜகவுக்கு சோடா பாட்டில்: ராமநாதபுரத்தில் ராவடி!!!

BJP
Last Modified திங்கள், 1 ஏப்ரல் 2019 (15:22 IST)
பாஜக வேட்பாளர் மீது பாட்டில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தேர்தல் களம் பிரச்சாரங்களால் சூடு பிடித்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  நேற்று தஞ்சாவூர் தொகுதி த.மா.க வேட்பாளர் என்.ஆர்.நடராஜனுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொண்டார். இரவு 9 மணியளவில் தஞ்சாவூர் பகுதியில் உள்ள ஒரத்தநாடு பேருந்து நிலையத்தில் திறந்தவெளி வேனில் முதல்வர் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கையில் மர்ம நபர் அவரின் கார் மீது செருப்பை வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
slipper
 
இந்நிலையில் ராமநாதபுரம் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், பெரியபட்டினத்தில் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார். அபோது மர்ம நபர் அவரை நோக்கி பாட்டிலை வீசினார். அந்த பாட்டில் அவர் அருகே நின்று கொண்டிருந்த அதிமுக நிர்வாகி உடையத்தேவர் மீது பட்டது. 
 
இதனால் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :