மீண்டும் தமிழகம் வரும் மோடி – அதிர்ச்சியில் தமிழக பாஜக தலைவர்கள் !

Last Modified ஞாயிறு, 31 மார்ச் 2019 (10:04 IST)
ஏப்ரல் 13 ஆம் தேதி மீண்டும் தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் மோடி தமிழகம் வர இருக்கிறார். அப்போது தேனி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட இருக்கிறார்.

அதிமுக வின் முக்கியப் புள்ளிகளில் ஒருவரான ஓபிஎ இந்த முறை தேனி தொகுதியில் தன்னுடைய மகனை மக்களவைத் தொகுதி உறுப்பினருக்கு நிறுத்தியிருக்கிறார். அமமுக சார்பிக் தங்க தமிழ்ச்செல்வனும் காங்கிரஸ் சார்பி ஈவிகேஎஸ் இளங்கோவனும் அதேத் தொகுதியில் போட்டியிடுவதால் போட்டி பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் எப்படியும் தனது மகனை வெற்றி பெற வைப்பதற்காக ஓபிஎஸ் கடுமையாக முயற்சி செய்து வருகிறார். அதிமுக முக்கியப்புள்ளிகள் மற்றும் அமைச்சர்கள் என எல்லோரையும் பிரச்சாரத்துக்காகவும் களப்பணிக்காகவும் தேனிக்கு அழைத்து சென்றுள்ளார். மேலும் உள்ளூர் பிரமுகர்களையும் சந்தித்து ஆதரவுக் கேட்டு வருகிறார்.

இதன் அடுத்த கட்டமாக மாஸ்டர் பிளான் ஒன்றைப் போட்டுள்ளார் ஓபிஎஸ். பிரதமர் மோடியை ஏப்ரல் 13 ஆம் தேதி தமிழகம் வரவழைத்து தேனி மாவட்டத்தில் மிகப்பிரம்மாண்டமான பிரச்சாரத்தை நடத்த இருக்கிறார். இதற்கு மோடியும் ஒத்துக்கொண்டுள்ளார். பாஜக போட்டியிடும் தொகுதிகளை விட்டுவிட்டு அதிமுக போட்டியிடும் தேனி தொகுதியில் மோடி பிரச்சாரம் செய்ய இருப்பதால் பாஜகவினர் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது.

முதன்முதலாக பிரதமர் ஒருவர் தேனிப் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :