பா.ஜ.க காவி தொப்பியை அணிய மறுத்த பேத்தி : அமித் ஷா ஏமாற்றம்

AMITH SHA
Last Updated: ஞாயிறு, 31 மார்ச் 2019 (18:02 IST)
குஜராத் மாநில தலைநகர் காந்திநகரில் நேற்று தலைவர் அமித் ஷா வேட்பு மனுதாக்கல் செய்ய வந்தார். அதற்கு முன்னதாக அகமதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் மற்றும் ஊர்வளத்தில் தன் குடும்பத்தினருடன் கலந்து கொண்டார் அமித்ஷா.
தனது மகன் ஜெய்ஷா மற்றும் பேரக்குழந்தைளுடன் ஊர்வளத்தில் கலந்து கொண்டார். அப்போது தனது பேத்தியைக் கையில் தூக்கி வைத்துக் கொண்ட அமித்ஷா, தன்னிடமிருந்த காவித் தொப்பியை எடுத்து பேத்தியின் தலையில் மாட்டினார். ஆனால் அந்தக் குழந்தை அதை மாட்டேன் என்று மறுத்திவிட்டது. மாறாஜ அக்குழந்தை தான் ஏற்கனவெ அணிந்திருந்த தொப்பியை மட்டும் அணிந்து கொண்டது.
 
இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.


இதில் மேலும் படிக்கவும் :