செவ்வாய், 18 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By J.Durai
Last Modified: சிவகங்கை , புதன், 17 ஏப்ரல் 2024 (08:30 IST)

பாஜகவின் தேர்தல் அறிக்கை மூன்று மணி நேரத்தில் சிதைந்தது-ப.சிதம்பரம் பேச்சு!

சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரத்திற்கு ஆதரவாக ப.சிதம்பரம் பிரச்சாரம் மேற்கொண்டார்.
 
பின்னர்  செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் மத்திய அமைச்சர்  ப.சிதம்பரம்.
 
பாஜகவினர் கச்சத்தீவு குறித்து பேசுவது அரசியல் சித்து விளையாட்டு. ப.சிதம்பரம், பாஜக தேர்தல் வாக்குறுதியில் கச்சத்தீவு குறித்து எதுவும் குறிப்பிடாததே அதற்கு உதாரணம் என்று கூறினார்.
 
நாடாளுமன்றத்தில் பாஜக கொண்டு வந்த சட்ட மசோதாக்களை எல்லாம் ஆதரித்த வாக்களித்த அதிமுக,தற்போது பாஜகவுடன் உறவில்லை என்பது கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் போன்றது.
 
தமிழ்நாட்டின் இட்லி தோசைகளை பிரதமருக்கு பிடித்ததில் மகிழ்ச்சிதான் ஆனால் மக்களுக்கு அவரை பிடிக்கவில்லையே.
 
சிவகங்கை தொகுதியில் வினோத போட்டி 
நாடாளுமன்ற உறுப்பினரான கார்த்தி சிதம்பரம் மீண்டும் போட்டியிடுகிறார் 
அவரை எதிர்த்து சுற்றுலா பயணிகள் போல் வந்துள்ள இரண்டு வெளியூர்  நபர்கள் நிற்கின்றனர் என்று பேசினார்.