வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 16 மார்ச் 2024 (15:19 IST)

பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்வோம்: அய்யாக்கண்ணு உறுதி

வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்வோம் என நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இன்று விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அய்யாக்கண்ணு  தேர்தல் வந்தால் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள், தேர்தல் முடிந்தால் எங்களை அடிமை போல் நடத்துகிறார்கள், குறிப்பாக பிரதமர் மோடி அனைத்து விவசாயிகளுக்கும் மாதம் 500 உதவி தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். ஆனால் அந்தத் தொகை அனைவருக்கும் கிடைக்கவில்லை 
 
விவசாயிகளுக்கு மோடி அரசில் எந்த விதமான உதவியும் கிடைக்கவில்லை. குறைந்தபட்ச ஆதார விலை கூட கிடைக்கவில்லை, மேலும் டெல்லியில் போராட்டம் நடத்த எங்களை போக விடாமல் தடுக்கிறார்கள் 
 
இந்த நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்த்து நாங்கள் பிரச்சாரம் செய்வோம். நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போட்டு கொடுங்கள். ஆனால் மோடிக்கு மட்டும் போடாதீர்கள் என்று நாடு முழுவதும் பிரச்சாரம் திட்டமிட்டு இருக்கிறோம் என்று அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். 
 
Edited by  Mahendran