வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By J.Durai
Last Modified: சிவகங்கை , வெள்ளி, 29 மார்ச் 2024 (14:14 IST)

பிரதமர் வேட்பாளர் மனு ஏற்பு-கமெடிக்கு அளவே இல்லாமல் அள்ளி விடும் சுயோட்சை வேட்பாளர்

புதுக்கோட்டை மாவட்டம்  மேல்நிலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனியப்பன்.
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
 
மனு தாக்கல் பரிசீலனை முடிந்து பழனியப்பன் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
 
இதனையடுத்து வெளியே வந்த பழனியப்பன் செய்தியாளர்களிடம் ரகசியத்தை உடைத்தார்.
 
இந்தியா முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில்  சுயோட்சையாக போட்டியிடும் அனைவரும் ஒரு குழு அமைத்து பேசி முடிவு செய்துள்ளோம்.
 
நான் தான் பிரதமர் வேட்பாளர்  பிஜேபி காங்கிரசுக்கு மாற்றாக எங்கள் அணி மாறப்போகிறது.
 
ஒவ்வொரு தொகுதியிலும் பத்துக்கு மேற்பட்ட சுயேச்சைகள் போட்டிட்டு ஆதரவு இல்லாமல் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாரும் ஒன்றிணைந்து ஒரு குழுவாக பேசி தனிமரம் தோப்பாகாது ஒண்ணா போன புரட்சி ஏற்படும் என்று முடிவு செய்து இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். 
 
இதை ஏன் முன்பே சொல்லமால்  ரகசியமாக வைத்துள்ளோம் என்றால்!
 
விலை பேசிடுவாங்க அதனால் தான்  ரகசியமாக வைத்திருந்தோம் என்றார்  சுயேட்சை வேட்பாளர் பழனியப்பன்.