1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (18:12 IST)

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரில் பறக்கும் படை சோதனை..! என்ன சிக்கியது..?

udayanithi stalin
தென்காசியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.
 
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 19-ந் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. 
 
தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் சங்கரன்கோவில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தென்காசியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.


சோதனையில் பணமோ, பொருளோ ஏதுவும் காரில் இல்லை. முழுமையான சோதனை முடிந்த பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.