ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By J.Durai
Last Modified: மதுரை , புதன், 10 ஏப்ரல் 2024 (18:01 IST)

ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட 6 லட்சத்தி 23,500 பணம்-பறக்கும் படையினர் பறிமுதல்!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கட்டக்குளம் பிரிவில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சம்மந்தபுரத்தை சேர்ந்த முகமது அலி மகன் முகமது ஆசாரிதீன் என்பவர்  உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட 2 லட்சத்தி 23  ஆயிரத்து 500 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
 
இதேபோல், சோழவந்தான் அருகே மேலக்கால் ரோட்டில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் பேட்டை பகுதி கோழி வியாபாரி ராஜாங்கம் என்பவரிடமிருந்து கணக்கில் வராத 4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
 
மொத்தம் ஆறு லட்சத்து 23 ஆயிரத்து 500 ரூபாய் தாசில்தார் விசாரணைக்கு பின்பு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.