வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 25 மார்ச் 2024 (09:06 IST)

தேர்தல் அறிவிப்பால் பட்டுச்சேலை விற்பனை மந்தம்.. காஞ்சிபுரம் வியாபாரிகள் வேதனை..!

தேர்தல் அறிவிப்பு காரணமாக பட்டுச்சேலை விற்பனை மந்தமாக உள்ளதாகவும் குறிப்பாக காஞ்சிபுரத்தில் உள்ள கடைகளில் பட்டு சேலைகள் விற்பனை மிகக் குறைந்து விட்டது என்றும் வியாபாரிகள் வருத்தத்துடன் தெரிவித்து வருகின்றனர்.

தேர்தல் அறிவிப்பு காரணமாக 50000 ரூபாய்க்கு மேல் ரொக்க பணம் எடுத்துச் செல்லக்கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பட்டுச் சேலை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் காஞ்சிபுரத்திற்கு வருவதில்லை என்று கூறப்படுகிறது.
 
பட்டுச்சேலை 50000 முதல் 2 லட்சம் ரூபாய் வரை காஞ்சிபுரத்தில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் பெரும்பாலான பொதுமக்கள் பட்டு சேலை வாங்க வரும்போது ரொக்க பணத்தை தான் எடுத்து வருகின்றனர். ஆனால் பறக்கும் படையினர் தற்போது தீவிர சோதனை செய்து வருவதாகவும் குறிப்பாக காஞ்சிபுரத்தில் பல பறக்கும் படைகள் நடமாடி கொண்டிருப்பதால் தற்போதைக்கு பட்டுச்சேலை வாங்குவதை பொதுமக்கள் நிறுத்தி விட்டதாகவும் இதனால் வியாபாரம் மந்தமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பட்டு சேலை பரிசு கொடுப்பதற்காக அரசியல்வாதிகள் மொத்தமாக வாங்க வருவார்கள் என்றும் ஆனால் பறக்கும் படையினரின் அதிரடி காரணமாக அவர்களும் வரவில்லை என்றும் வியாபாரிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

Edited by Siva