மாநிலங்களவை சீட் தேவையா.? தாமரை சின்னத்தில் போட்டியிடுங்கள்.! பாஜக அதிரடி..!!
மாநிலங்களவை சீட் கேட்பவர்கள், மக்களவை தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று பாஜக மாநில துணை தலைவர் கே.பி ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளிடம் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதிமுக உடனான கூட்டணி முறிந்து விட்டதால், பாமக, தேமுதிக உள்ளிட்ட முக்கிய கட்சிகளிடம் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அதேசமயம் பாமக, தேமுதிகவுடன் அதிமுகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பாமகவும், தேமுதிகவும் அதிமுகவில் இணைய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் கட்சிகளிடம் மாநிலங்களை சீட் வழங்க வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார். அதேபோல் பாமகவும் மாநிலங்களை ஒரு சீட் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் மாநிலங்களவை சீட் கேட்பவர்கள் மக்களவை தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று பாஜக மாநில துணை தலைவர் கே.பி ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
39 தொகுதிகளிலும் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதே தொண்டர்களின் எண்ணம் என்று அவர் கூறியுள்ளார். இதனால் பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் இணைவது கேள்வி கேள்விக்குறிதான்.