1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 10 பிப்ரவரி 2024 (11:09 IST)

14 தொகுதி எல்லாம் தர முடியாது.. ஈபிஎஸ் போட்ட நிபந்தனைக்கு ஒப்புக்கொண்ட பிரேமலதா..!

premalatha vijaynakanth
வரும் நாடாளுமன்ற தேர்தலில் 14 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதி கொடுக்கும் அணியுடன் கூட்டணி என பிரேமலதா விஜயகாந்த் கூறிய நிலையில் அவரது ஆஃபரை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.

பாஜக தரப்பில் மூன்று தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்றும் ராஜ்யசபா தொகுதி குறித்து பின்னர் யோசித்துக் கொள்ளலாம் என்றும் பதில் கூறப்பட்டதாக தெரிகிறது. ஆனால் அதிமுக தரப்பில் மூன்று தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதி தரலாம் என்று கூறிய நிலையில் இதற்கு பிரேமலதா ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றோ அல்லது ராஜ்யசபா எம்பி மூலம் பாராளுமன்றத்துக்கு சென்றே தீர வேண்டும் என்று பிரேமலதா முடிவு செய்திருப்பதாகவும் அதிமுகவிடம் இருந்து ராஜ்யசபா தொகுதியை பெற்று பாஜகவிடம் மத்திய அமைச்சர் பதவியும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் கணக்கு போடுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கிட்டத்தட்ட அதிமுக - தேமுதிக கூட்டணி முடிவு அடைந்து விட்டதாகவும் விரைவில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பிரேமலதா நேருக்கு நேர் சந்தித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Edited by Mahendran