1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Ishan kissan will start playing to be considered says Rahul dravid

இஷான் கிஷான் அணிக்குள் வரவேண்டுமென்றால் அதை செய்யவேண்டும்… நிபந்தனை வைத்த டிராவிட்!

ரிஷப் பண்ட்
இந்திய அணியில் சமீபத்தைய சில ஆண்டுகளாக வாய்ப்புகள் பெற்று வருகிறார் இஷான் கிஷான். பங்களாதேஷ் அணிக்கு எதிரான தனது முதல் ஒருநாள் போட்டி சதத்தையே இரட்டை சதமாக மாற்றினார். ஆனாலும் அவருக்கான இடம் இந்திய அணியில் இன்னும் நிரந்தமராகவில்லை.

அதே போல தொடக்க ஆட்டக்காரராக விளையாடுவாரா இல்லை நான்காவது வீரராக விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்போது அவர் இந்திய அணியில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில் அவர் மீண்டும் அணிக்கு திரும்புவது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியுள்ளார்.

அதில் “இஷான் மீண்டும் அணிக்கு திரும்ப வேண்டுமென்றால், அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும். அப்போதுதான் அவர் பரிசீலனைக்கு உட்படுத்தப்படுவார்” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்த இந்தியா..! 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!