திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : சனி, 23 மார்ச் 2024 (11:13 IST)

வாக்கிங் சென்று வாக்கு சேகரித்த முதல்வர்..! செல்ஃபி எடுத்து மகிழ்ந்த மக்கள்..!!

Stalin
தஞ்சாவூரில் தங்கியுள்ள தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், இன்று காலை வாக்கிங் சென்றபடியே பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
 
தமிழகத்தில் தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளன. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நேற்று மாலை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்த கூட்டம் முடிந்தவுடன் காரில் புறப்பட்டு தஞ்சாவூருக்கு சென்றார். தஞ்சாவூர் சங்கம் ஓட்டலில் தங்கியுள்ள முதல்வர் இன்று மாலை திருவாரூர் செல்கிறார். கொரடாச்சேரியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் தஞ்சாவூர், நாகை தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.
 
Stalin Campaign
இந்நிலையில் தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்கு நடைப்பயிற்சியில் ஈடுபட்ட மக்களிடம் வாக்கு சேகரித்தார். 

 
பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்டோர் முதல்வரிடம் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் விளையாட்டு வீரர்களின் விருப்பத்தின்படி கைப்பந்தை அடித்து போட்டியைத் தொடங்கி வைத்தார்.