திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 19 மார்ச் 2024 (20:35 IST)

கூட்டணி கட்சிகளுடன் பாஜக நாளை ஆலோசனை..! தொகுதி உடன்பாடு இறுதி செய்ய முடிவு..!!

BJP Team
மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பாஜக நாளை ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தமிழகத்தில் அடுத்த மாதம் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதிமுகவில் கூட்டணி பேச்சு வார்த்தை இன்னும் நிறைவடையாமல் உள்ளது.

அதிமுகவில் பாமக இணையும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் திடீர் திருப்பமாக பாஜகவில் பாமக இணைந்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பா.ஜ.க. கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

 
பாஜக கூட்டணியில் பாமக இணைந்த நிலையில் தேமுதிகவை தங்கள் கூட்டணியில் சேர்க்க அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பாஜக நாளை ஆலோசனை நடத்துகிறது. ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோருடன் நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.