1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By J.Durai
Last Modified: கோயம்புத்தூர் , செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (08:58 IST)

மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

கோவை சிவானந்தா காலனி பகுதியில் உள்ள மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
 
3"கார்களில் வந்த 10" க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மீனா லோகு இல்லத்தில் சோதனை நடத்தினர்
 
சுமார் ஒன்றரை மணி நேரம் சோதனை நடத்திய நிலையில் வீட்டில் இருந்து எந்த பொருட்களும் கைபற்றப்பட வில்லை வீட்டில் இருந்த கார், அலுவலகம்,வீடு என அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்
 
வாக்காளர்களுக்கு பணபட்டுவா செய்ய வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை என தகவல்
 
சோதனை நடத்திய நிலையில் வீட்டில் இருந்து எந்த பொருட்களும் கைபற்றப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.