செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : புதன், 20 மார்ச் 2024 (11:30 IST)

தேமுதிகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு..! எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Admk Dmdk
மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
 
தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதி மற்றும் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பது குறித்த அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். அதிமுக சார்பில் 16 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அவர் அறிவித்தார்.
 
அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவிற்கு 5 தொகுதிகளும்,  புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
 
புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியும், எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

தேமுதிகவுக்கு 5 மக்களவைத் தொகுதிகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளதால், ஒரு மாநிலங்களவை பதவி வழங்க வேண்டும் என்ற தேமுதிகவின் கோரிக்கையை அதிமுக நிராகரித்துள்ளது.


மேலும் கூட்டணி தொடர்பான அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என்று பிரேமலதா கூறி இருந்த நிலையில்,  தேமுதிகவுக்கான தொகுதிகள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதனால் அதிமுக தேமுதிக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.