வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 19 மார்ச் 2024 (15:47 IST)

அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் எடப்பாடி ஆலோசனை..!

edapadi
அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை இறுதி செய்வது தொடர்பாக கே.பி. முனுசாமி, தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்துகிறார்.

நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
 
தேசிய ஜனநாயக கூட்டணிக்குள், பா.ம.க.வை கொண்டுவர தமிழக பாஜக கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. அதேபோல், அ.தி.மு.க.வும், பா.ம.க.வை தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
 
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக பா.ஜ.க. மற்றும் பா.ம.க. இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. தேசிய ஜனநாயக கூட்டணியுடன் பா.ம.க.வும் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது.
 
பாஜக கூட்டணியில் பாமக இணைந்தது அதிமுகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. தற்போது தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வர அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நாளை மறுநாள் அதிமுக தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது.

 
இந்த நிலையில், அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை இறுதி செய்வது தொடர்பாக கே.பி. முனுசாமி, தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.