வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 முக்கிய வேட்பாளர்கள்
Written By
Last Modified: வியாழன், 4 ஏப்ரல் 2019 (13:21 IST)

ராகுலுக்கு எதிராக களமிறங்கும் சரிதா நாயர்: உச்சகட்ட பரபரப்பில் வயநாடு!!!

ராகுலுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டி நான் வயநாட்டில் போட்டியிடப்போகிறேன் என சரிதா நாயர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2013-ஆம் ஆண்டு கேரளாவில் வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக நடிகையும் பெண் தொழில் அதிபருமான சரிதா நாயர் உள்ளிட்ட சிலர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
 
இந்த மோசடியில் அப்போது காங்கிரஸ் தலைமையில் முதல்வராக இருந்த உம்மண் சாண்டிக்கும் மேலும் சில அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டினார் சரிதா நாயர்.  மேலும் தமக்கு செக்ஸ்  தொல்லை கொடுத்ததாக கூறி பரபரப்பைக் கிளப்பினார். இதனால் அப்போது முதல்வராக இருந்த உம்மன் சாண்டியின் உதவியாளர்கள், அலுவலக பணியாளர்கள் உட்பட சிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சரிதா நாயர் மீது இது தொடர்பான வழக்குகள் திருவனந்தபுரம், பெரும்பாவூர், கோவை உள்பட பல்வேறு நீதிமன்றங்களில் உள்ளன.
இந்நிலையில் இன்று கேரளா வந்த ராகுல்காந்தி தான் போட்டியிடும் வயநாடு தொகுதியில்  தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
 
இதற்கிடையே சரிதாநாயர் தற்போது காங்கிரஸ் மட்டும் ராகுல்காந்திக்கு பாடம் புகட்ட நான் வயநாட்டில் போட்டியிடப்போகிறேன் என கூறியுள்ளார். ஏற்கனவே வயநாடு தொகுதியில் ராகுல் போட்டியிடுவது பரபரப்பாக பார்க்கபடும் நிலையில் சரிதா நாயரின் இந்த முடிவு வயநாடு தொகுதியை மேலும் பரப்பரப்புக்கு ஆளாக்கியுள்ளது.