பழிக்குப் பழி... துரைமுருகனை பழிதீர்த்தாரா பிரேமலதா விஜயகாந்த்? பகீர் கிளப்பும் பேட்டி...

durai
Last Modified செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (09:36 IST)
தேமுதிகவை சீண்டினால் இதுதான் கதி என துரைமுருகனை சாடியுள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.
தேர்தல் கூட்டணிக்கு ஒரே நேரத்தில் திமுக, அதிமுக ஆகிய இருவரிடமுமே தேமுதிக பேரம் பேசியது நாம் அனைவரும் அறிந்ததே. தேமுதிக திமுகவிடம் பேரம் பேசியதை வெட்டவெளிச்சமாக்கியவர் நம் திமுக பொருளாளர் துரைமுருகன். இதனால் தேமுதிகவிற்கு இருந்த கொஞ்சநஞ்ச பேரும் டேமேஜ் ஆகிப்போனது. இதனால் பிரேமலதா மற்றும் தேமுதிகவினர் துரைமுருகன் மீது செம கடுப்பில் இருந்தனர்.
 
இந்நிலையில் கடந்த சில நாட்களாக துரைமுருகன் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து கோடிக்கணக்கான பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
இதுகுறித்து பேசியிருக்கும் பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக மீது கை வைத்தால் என்ன ஆகும் என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது என கூறியிருக்கிறார். இதுவே இவருக்கு திமுகவில் சீட் கிடைத்திருந்தால் வேறு மாதிரி பேசியிருப்பார். 
 
பிரேமலதா கூறுவதை பார்த்தால், தங்களை அவமானப்படுத்திய துரைமுருகனை பழிதீர்க்க மத்திய அரசிடம் பேசி, வருமான வரித்துறையை ஏவினாரா என்ற சந்தேகம் எழுகிறது. ஏனென்றால் எதிர் கட்சி நபர்களிடமே இவ்வளவு பணம் சிக்குகிறது என்றால் ஆளும் கட்சியினரிடம் எவ்வளவு பணம் இருக்கும் என்ற சந்தேகமும் எழுகிறது. வருமான வரித்துறை எல்லோருக்கும் பொது என்றால் ஏன் அதிமுக அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்களின் வீட்டில் சோதனை நடத்த தயங்குகிறார்கள் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :