கனிமொழி வெற்றிக்காக திருச்செந்தூரில் பூஜை செய்த ராஜாத்தி அம்மாள்!

Last Modified புதன், 27 மார்ச் 2019 (07:26 IST)
இதுவரை மாநிலங்களவை எம்பியாக மட்டுமே இருந்து வந்த திமுக தலைவர் ஸ்டாலினின் சகோதரி கனிமொழி தற்போது முதல்முறையாக மக்களவை தேர்தலில் தூத்துகுடி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை போட்டியிடுகிறார்.
தற்போதைய தூத்துகுடி நிலவரம் கனிமொழிக்கு சாதகமாக இருந்தாலும், தமிழிசையின் தீவிர பிரச்சாரம், சரத்குமாரின் திடீர் ஆதரவு மற்றும் அவரது பிரச்சாரம் ஆகியவை கனிமொழிக்கு சிக்கல் கொடுப்பவையாக உள்ளது

இந்த நிலையில் கனிமொழி வெற்றி பெற நேற்று அவரது தாயார் ராஜாத்தி அம்மாள் திருச்செந்தூர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார். ராஜாத்தி அம்மாளை சிறப்புடன் வரவேற்ற கோவில் பூசாரிகள் அவருக்கு சிறப்பு பிரசாதமும் வழங்கினர். அதனை தொடர்ந்து யானைக்கு பிரசாதம் வழங்கிய ராஜாத்தி அம்மாள், தனது மகளின் வெற்றிக்காக வழிபட வந்ததாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நெற்றியில் இட்ட விபூதியை தனது தந்தை கருணாநிதி உடல்நிலை சரியில்லாத போதிலும் அழித்தவர் என்று பெருமையாக கனிமொழி கூறிய நிலையில் தற்போது கனிமொழியின் வெற்றிக்காக அதே விபூதி பிரசாதத்தை அவரது தாயார் பூசாரியிடம் இருந்து பெற்றுக்கொண்டது தேர்தல் சந்தர்ப்பவாதம் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :