வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 27 மார்ச் 2019 (08:25 IST)

கனிமொழியை எதிர்த்து போட்டியிடும் திரைப்பட இயக்குனர்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் சகோதரியும் ராஜ்யசபா உறுப்பினருமான கனிமொழி முதல்முறையாக மக்களவை தேர்தலில் தூத்துகுடி தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி பலம், கருணாநிதியின் மகள் என்ற பிரபலம், ராஜ்யசபாவில் சிறப்பாக பணியாற்றியவர் என்ற பெயர் ஆகியவை அவருடைய வெற்றிக்கு சாதகமாக உள்ளது. தமிழக பாஜக தலைவர் தமிழிசையின் போட்டி, சரத்குமாரின் பிரச்சாரம் ஆகியவை அவருக்கு பாதகமான அம்சங்கள் ஆகும்
 
இந்த நிலையில் கனிமொழியை எதிர்த்து அமமுக வேட்பாளர் ம.புவனேஸ்வரன் மற்றும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் டி.பி.எஸ்.பொன் குமரன் ஆகியோர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர், இவர்கள் இருவரும் அதிமுக, திமுக ஓட்டுக்களை பிரிப்பார்கள் என்றும், எந்த கட்சியின் ஓட்டுக்களை அதிகம் பிரிக்கின்றார்களோ அந்த கட்சிக்கு பாதகமான நிலை ஏற்படும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
 
இந்த நிலையில் நேற்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில் கடைசி நேரத்தில் திடீரென தூத்துகுடி தொகுதியில் திரைப்பட இயக்குனர் வ.கவுதமன் போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சினைக்க்காக பல்வேறு போராட்டங்கள் நடத்தி அந்த பகுதி பொதுமக்களின் கவனம் ஈர்த்த வ.கவுதமன் இந்த தொகுதியில் போட்டியிடுவது மற்ற கட்சிகளின் வேட்பாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது