எச்.ராஜா ஒரு கடைந்தெடுத்த அயோக்கியத்தனமான அரசியல்வாதி: ஸ்டாலின் காட்டம்

stalin
Last Modified வெள்ளி, 29 மார்ச் 2019 (16:01 IST)
சிவகங்கையில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பேசிய ஸ்டாலின் எச்.ராஜா ஒரு கடைந்தெடுத்த அயோக்கியத்தனமான அரசியல்வாதி என காட்டமாக பேசியுள்ளார்.
 
சிவகங்கை மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பாஜக சார்பில் எச்.ராஜா போட்டியிடுகிறார். அவர் அங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதே போல் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் காங்கிரஸ் சார்பில் சிவகங்கை தொகுதிக்கு கடைசியாக கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
 
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் கார்த்தி சிதம்பரத்திற்கு ஆதரவாக சிவகங்கையில் மக்களிடையே பேசினார். அப்போது பேசிய அவர் எக்காரணத்திலும் பாஜகவை வெற்றி பெற செய்யக்கூடாது. சிவகங்கையை பொறுத்தவரையில் இங்கு போட்டியிடும் எச்.ராஜா ஒரு கடைந்தெடுத்த அயோக்கியத்தனமான அரசியல்வாதி.

பெரியார், அம்பேத்காரின் சிலைகளை உடைப்பவர். திராவிட கொள்கைகளை கீழ்த்தரமாக பேசும் இந்த மாதிரியான ஆட்களை தோற்கடித்து உங்கள் பொன்னான வாக்குகளை கார்த்தி சிதம்பரத்திற்கு போடுங்கள் என ஸ்டாலின் பேசினார்.


இதில் மேலும் படிக்கவும் :