ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 29 மார்ச் 2019 (10:05 IST)

மு.க.அழகிரி டீசர்ட் அணிந்து ஸ்டாலினுடன் செல்பி: கடுப்பான திமுகவினர்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், அவரது சகோதரரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரிக்கும் கடந்த பல ஆண்டுகளாக ஏழாம்பொருத்தமாக இருந்து வரும் நிலையில் இன்றைய தேர்தல் பிரச்சாரத்தின்போது மு.க.அழகிரி படம் போட்ட டீசர்ட் அணிந்த ஒருவர், மு.க.ஸ்டாலினுடன் செல்பி எடுக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
அதிகாலையில் வாக்கிங் செல்லும்போது கூட தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரையில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து சாலையில் நடந்து சென்று கொண்டே வாக்கு சேகரித்தார். 
 
அப்போது ஒரு இளைஞர் மு.க.ஸ்டாலினுடன் செல்பி எடுக்க முயன்றார். அவர் மு.க.அழகிரியின் படம் போட்ட டீசர்ட் அணிந்திருந்ததால் திமுகவினர் கடுப்பாகினர். ஆனாலும் ஸ்டாலின் சிரித்த முகத்துடன் அந்த நபருடன் செல்பி எடுத்து கொண்டார். இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
 
மதுரை அழகிரியின் கோட்டை என்று கூறப்படும் நிலையில் மதுரையில் தீவிரமாக பிரச்சாரம் செய்யும் ஸ்டாலின், அழகிரி ஆதரவாளருடன் புகைப்படமும் எடுத்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது