திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 28 மார்ச் 2019 (20:53 IST)

நயன் படத்தில் கமிட்டான யுவன், எக்சிட் ஆனது ஏன்?

நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்தின் நான் இசையமைக்கவில்லை என யுவன் சங்கர் ராஜா வாண்டெட்டாய் டிவிட்டரில் டிவிட் போட்டுள்ளார். இதன் பின்னர் உள்ள உண்மை என்னவென தகவல் கிடைத்துள்ளது.
 
தமிழில் கமல்ஹாசன் நடித்த உன்னைப்போல் ஒருவன், அஜித் குமார் நடித்த பில்லா 2 ஆகிய படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி, நயன்தாராவை வைத்து கொலையுதிர் காலம் என்ற படத்தை இயக்கியுள்ளார். 
 
படம் துவங்கிய போது யுவன் இந்த படத்தை தயாரிப்பதாகவும், இசையமைப்பதாகவும் இருந்தது. ஆனால், இந்த படத்தில் இருந்து யுவன் விலகினார். மேலும் இந்த படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழாவின் போது கொலையுதிர் காலம் படத்துக்கு நான் இசை அமைக்கவில்லை என டிவிட் போட்டார். 
இது குறித்து படக்குழு தரப்பு தெரிவித்ததாவது, படத்தின் மற்றொரு தயாரிப்பு நிறுவனமான பூஜா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துக்கும், யுவனுக்கும் பிரச்னை இருந்துள்ளது. 
 
இதனால் யுவன் படத்தில் இருந்து விலகினார். மேலும், தனது பெயரை படத்தின் விளம்பரங்களில் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.