வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Updated : சனி, 23 மார்ச் 2019 (16:55 IST)

டோக்கன் சீசன் முடிந்து இப்போ பாஸ்புக் சீசன்: தினகரனை வச்சு செய்த அமைச்சர்

தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றன. பிரச்சாரத்தின் போது தங்களை பற்றி பேசுகிறார்களோ இல்லையோ, மற்ற கட்சிகளை வாரிவிடுவதை தவறாமல் செய்கின்றனர். 
 
அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் அதிமுகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். சாத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி ஆகியோரை ஆதரித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரச்சாரம் செய்தார். 
 
அப்போது அவர் கூறியதாவது, முதல்வர் பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் வாக்காளர்கள் அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.
தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் முடிந்து ஆய்வுப் பணிகள் நடைபெறுகின்றன. இன்னும் ஒருசில வாரங்களில் அனைத்து கிராமங்களுக்கும் தாமிரபரணி கூட்டுக் குடி நீர் வழங்கப்படும்.
 
முன்பு டோக்கன் கொடுத்து ஏமாற்றிய கூட்டம், தற்போது பணம் போடுகிறோம் என்று கூறி வங்கி பாஸ்புக்கை கேட்டு வந்து கொண்டிருக்கிறது. இவர்களை நம்பி வாக்காளர்கள் யாரும் பாஸ்புக்கை கொடுத்து ஏமாற வேண்டாம். உங்கள் பணத்தை எடுத்து சென்று விடுவார்கள் என தினகரனை கேலி செய்து பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார்.