ஒன்னுக்கு ஒன்னு சளைச்சவங்க இல்ல... தங்கபாலு இல்லாத குறையை தீர்த்து வைத்த பழனி துரை!

Last Updated: வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (14:59 IST)
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்ற தேர்தலுக்காக பிரச்சாரம் செய்ய தமிழகம் வந்துள்ளார். ஒரே நாளில் இன்று நான்கு இடத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்கிறார் ராகுல். 
 
தற்போது கிருஷ்ணரியில் பிரச்சாரம் செய்த அவருக்கு மொழிப்பெயர்ப்பாளராக தங்க பாலுக்கு பதிலாக பழனி துரை என்பவர் வந்திருந்தார். இதற்கு முன்னர் ராகுல், கன்னியாக்குமரியில் பேசியது அதை மொழி பெயர்த்த தங்க பாலு, இம்முறை மொழி பெயர்க்கவில்லை. தங்க பாலு வயநாடு தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதால் அவர் வரவில்லை என தெரிகிறது. 
தங்க பாலு, மொழி பெயர்த்த போதும் அவர் சரியாக அப்பணியை செய்யவில்லை. இதனால், இவரை வைத்து மீம் கிரியேட்டர்கள் கண்டெண்ட் எடுத்துக்கொண்டர். சரி இப்போது வந்தவராச்சு சரியாக மொழிப்பெயர்ப்பார் என பார்த்தால், அதுவும் இல்லை.
 
துவக்கத்தில் நன்றாகவே மொழி பெயர்த்து வந்த பழனி துரை, பின்னர் ராகுல் காந்தி கருத்துக்கு சமமந்தமே இல்லாத கருத்துகளை மொழி பெயர்ப்பாக கூறினார். இதில் சிறப்பு என்னவெனில், பழனி துரையும் தங்க பாலு போலவே ராகுலின் முகத்தை பார்த்து பார்த்து தவறாக பேசினார். ஆகமொத்தம் ரெண்டும் பேரும் ஒன்னுக்கு ஒன்னு சளைத்தவர்கள் இல்லை. 


இதில் மேலும் படிக்கவும் :