1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (15:12 IST)

வேட்பாளர் இல்லாமல் பிரச்சாரம் – தேனி தொகுதியில் வினோதம்

தமிழக மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளநிலையில் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.

முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்துள்ள நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி இரண்டாம் கட்டமாக வரும் 18 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. பிரச்சாரம் 16 ஆம் தேதியுடன் முடிவடைவதால் சுட்டெரிக்கும் வெயிலிலும் அரசியல்வாதிகள் தீவிரமாகப் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி தொகுதியில் இந்தமுறை ஓபிஎஸ் தனது மகனை மக்களவை வேட்பாளராக அதிமுக சார்பில் நிறுத்துகிறார். தனது மகனுக்காக தான் மட்டுமல்லாது அதிமுகவில் முக்கியத்தலைகள் முதல் மோடி வரை தேனிக்கு அழைத்துச் சென்று பிரச்சாரம் மேற்கொள்ள வைக்கிறார். அதுமட்டுமல்லாமல் தன் குடும்பத்தாரை கொண்டு வீடு வீடாக சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொள்ள வைக்கிறார்.

எப்படியாவது மகனை வெற்றிப் பெற வைக்க ஓபிஎஸ் கடுமையாக போராடி வரும் நிலையில் நேற்று தேனி தொகுதிக்கு உட்பட்ட வாடிப்பட்டி பகுதியில் ஓபிஎஸ் தனது பிரச்சார வாகனத்தில் தனது மகனுக்காக பிரச்சாரம் செய்தார். ஆனால் அப்போது அவரது மக்னான ரவீந்தர் அந்த வாகனத்தில் இல்லை. ஓபிஎஸ்  பின்னால் இரண்டு அமைச்சர்கள் நின்று கொண்டிருந்தனர். வேட்பாளர் இல்லாமல் ஓபிஎஸ் மட்டும் பிரச்சாரம் செய்ததால் மக்கள் குழப்பமடைந்தனர்.