1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Updated : செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (13:45 IST)

பரபரப்பை ஏற்படுத்தும் வேலூர் தொகுதி - வருமான வரித்துறை திடீர் விளக்கம்!

வேலூரில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் அவரின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் கோடிக்கணக்கான ரூபாய் கைப்பற்றப்பட்டதை அடுத்து தேர்தலை ரத்து செய்யும் முயற்சிகள் நடைபெற்றுவருவதாக செய்திகள் வெளியாகின. 
 
அதனை தொடர்ந்து வேலூர் தொகுதிக்கான மக்களவைத் தேர்தலை ரத்து செய்வதற்க்கான பரிந்துரையை குடியரசு தலைவருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியானது. 
 
ஆனால், ஊடகங்களில் வெளியான தகவல்களை மறுத்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், வேலூரில் தேர்தலை நிறுத்துவது தொடர்பாக இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளது.
இதை தொடர்ந்து இப்போது வருமான வரித்துறை வேலூர் தொகுதி தேர்தல் ரத்து குறித்து விளக்கம் அளித்துள்ளது. வருமான வரித்துறை தரப்பில் கூறப்பட்டதாவது, வேலூர் தொகுதி தேர்தல் ரத்து குறித்து வருமான வரித்துறை சார்ப்பில் எந்த பரிந்துரையும் மேற்கொள்ளப்படவில்லை. வருமான வரித்துறை எப்போதும் தேர்தல் ரத்து குறித்து எந்த பரிந்துரையும் செய்வதில்லை. 
 
அதேபோல், இதுவரை வேலூரில் நடந்த வருமான வரி சோதனை குறித்த அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் ஐந்து முறை சமர்பித்துள்ளோம். சமர்பிக்கப்பட்ட அறிக்கையில் உண்மை தகவல்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளோம் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.