வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 13 ஏப்ரல் 2019 (07:01 IST)

இரவோடு இரவாக மதுரை வந்த பிரதமர் மோடி: இன்று சூறாவளி பிரச்சாரம்

நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தமிழகத்திற்கு வருகை தந்து ஒரே நாளில் மதுரை உள்பட நான்கு இடங்களில் பிரச்சாரம் செய்த நிலையில், நேற்று இரவோடு இரவாக பிரதமர் மோடியும் மதுரை வந்துள்ளார். அவர் இன்று காலை முதல் மாலை வரை பிரச்சாரம் செய்யவுள்ளார்.
 
நேற்றிரவு கேரள மாநிலம் கோழிக்கோட்டிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடி, பின்னர் கார் மூலம் மதுரை பசுமலையில் உள்ள தாஜ் கேட்வே ஹோட்டலுக்கு சென்றார். அங்கு அவர் நேற்றிரவு தங்கினார். பிரதமர் மோடி மதுரையில் தங்குவதை அடுத்து மதுரை மாநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இன்று காலை பிரதமர் மோடி, துணை முதல்வர் மகன் போட்டியிடும் தேனி தொகுதியிலும், நயினார் நாகேந்திரன் போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதியிலும் தேர்தல் பிரசாரம் செய்யவுள்ளார். 
 
முன்னதாக மதுரை வந்த பிரதமர் மோடியை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், '40 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நான்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியல் விரைவில் அறிவிக்கபடும் என்றும் கூறினார்.