வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: செவ்வாய், 19 மார்ச் 2019 (07:30 IST)

ஜெயிக்கலைன்னா மாவட்ட செயலாளர் போஸ்ட் குளோஸ்: எடப்பாடியின் அதிரடி

தமிழகத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான 39 தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று மாவட்ட செயலாளர் கூட்டத்தையும் கூட்டினார். இந்த கூட்டத்தில் அவர் கொஞ்சம் கறாராக பேசியதாக தெரிகிறது
 
ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு பலமான கூட்டணியை அமைத்துள்ளோம். வேட்பாளர்களையும் பாத்து பாத்து தேர்வு செய்துள்ளோம். அதேபோல் தேர்தல் செலவுக்கு தேவையான பணம் தேவையான நேரத்தில் சரியாக வந்து சேரும். இதையெல்லாம் வைத்து உங்கள் பகுதி வேட்பாளரை வெற்றி பெற செய்வது உங்கள் பொறுப்பு. வெற்றி பெறாத மாவட்ட செயலாளர்கள் நீக்கப்படுவார்கள். அப்புறம் என்மீது வருத்தம் கொள்ள கூடாது என்று மாவட்ட செயலாளர்கள் இடையே முதல்வர் கறாராக பேசினாராம்
 
மேலும் இந்த கூட்டத்தில் துணை முதல்வர் பேசியபோது, 'இன்னும் ஒருசிலர் ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி என்று மனதில் வைத்து கொண்டு செயல்பட்டு வருகின்றனர். அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. அதிமுக என்பது இனி ஒரே அணிதான். எல்லோரும் ஒற்றுமையாக பணிபுரிந்து கழக வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள்' என்று கூறினாராம்
 
இதனையடுத்து மாவட்ட செயலாளர்கள் சுறுசுறுப்பாகியுள்ளதாகவும், டைம்ஸ் நெள கருத்துக்கணிப்பை பொய்யாக்க வேண்டும் என்றும் அவர்கள் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது