பறக்கும் படையினர் சோதனை!! கடுப்பாகி கத்திய நடிகை நமீதா!!!

namitha
VM| Last Modified வெள்ளி, 29 மார்ச் 2019 (09:00 IST)
சேலத்தில் நடிகை நமீதா சென்ற காரில் பறக்கும் படையினர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
மக்களவைத் தேர்தலையொட்டி வாக்காளர்கள் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் நோக்கில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் கண்காணிப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
 
இவர்கள் மாவட்டங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். இதேபோல் சேலம் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் தருவதை தடுப்பதில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.
 
சேலம் புலிக்குத்தி தெரு பகுதியில் பறக்கும் படை அலுவலர் ஆனந்த் யுவனேஸ் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை சோதனை செய்வதற்காக அதிகாரிகள் நிறுத்தினார்கள். 
car
அந்தக் காரின் நடிகை நமீதா மற்றும் அவருடைய கணவர் உள்பட 2 பேர் இருந்தனர். இதையடுத்து அந்த காரை சோதனை அதிகாரிகள் முயன்றனர். ஆனால் அதற்கு நமீதா உட்பட அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 
 
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி பணி செய்ய விடும்படி கேட்டுக் கொண்டதால் சோதனைக்கு நமிதா ஒத்துழைப்பு அளித்தார். இதன்பின் காரை சோதனையிட்ட பறக்கும் படை  அதிகாரிகள் காரில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் நகை எதுவும் இல்லை என்பதை கண்டுபிடித்தனர். நடிகை நமீதா தனது கணவருடன் ஏற்காட்டுக்கு சுற்றுலா வந்தது அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது.


இதில் மேலும் படிக்கவும் :